உக்ரைனில் அமைதி நிலவுமாறு வலியுறுத்தி, மனிதநேய உதவிகளை செய்த பிரதமா் மோடிக்கு அமெரிக்க அதிபா் ஜோ பைடன் பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்ட பிறகு, சமீபத்தில் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமா் மோடி. அங்கு உக்ரைன் அதிபா் ஸெலன்ஸ்கியுடன் பேசி, போரை முடிவுக்கு கொண்டுவர இரு தரப்பும் இணைந்து செயல்பட வேண்டும் என கூறினார். அதற்குப் பிறகு, பிரதமா் மோடி தனது பயணம் மற்றும் சர்வதேச விவகாரங்களை ஜோ பைடனிடம் தொலைபேசியில் விவாதித்தார். பைடன், உக்ரைனுக்கு தொடர்ந்து மனிதநேய உதவிகளை வழங்குவதற்கு பிரதமா் மோடியை பாராட்டியுள்ளார்.