தென் ஆப்பிரிக்கா - அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 63 பேர் பலி

August 31, 2023

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகரில் உள்ள மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 63 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், 43 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. மொத்தம் 5 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. தீ விபத்து குறித்து நள்ளிரவு 1:30 […]

தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்ஸ்பர்க் நகரில் உள்ள மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 63 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், 43 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மொத்தம் 5 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. தீ விபத்து குறித்து நள்ளிரவு 1:30 மணி அளவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இன்று காலை வரை போராடி தீயை முழுமையாக அணைத்தனர். எனினும், விபத்து நேர்ந்த பகுதியில் இருந்து புகை வெளியேறி வருவதாக கூறப்படுகிறது. குடியிருப்புக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கட்டிடம் ஒழுங்கற்ற முறையில் கட்டப்பட்டிருந்ததால், தீ விபத்தின் போது, பொதுமக்களால் வெளியேற முடியாமல் போனதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu