ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் பேங்க் சொத்துக்களை ஜேபி மோர்கன் கையகப்படுத்துகிறது

அமெரிக்காவைச் சேர்ந்த ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் பேங்க், நேற்று முதல் மூடப்பட்டது. அதைத் தொடர்ந்து, வங்கியின் சொத்துக்கள் அனைத்தையும் ஜேபி மோர்கன் வங்கி வாங்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதன் மூலம், வங்கியில் வைப்பு வைத்திருந்தவர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கி மற்றும் ஜேபி மோர்கன் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் இந்த தகவல்களை தெரிவித்துள்ளது. வங்கிகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவின் 8 மாகாணங்களில் இயங்கி […]

அமெரிக்காவைச் சேர்ந்த ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் பேங்க், நேற்று முதல் மூடப்பட்டது. அதைத் தொடர்ந்து, வங்கியின் சொத்துக்கள் அனைத்தையும் ஜேபி மோர்கன் வங்கி வாங்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதன் மூலம், வங்கியில் வைப்பு வைத்திருந்தவர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கி மற்றும் ஜேபி மோர்கன் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் இந்த தகவல்களை தெரிவித்துள்ளது.

வங்கிகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தின்படி, அமெரிக்காவின் 8 மாகாணங்களில் இயங்கி வரும் 84 ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் பேங்க் கிளைகள், இனிமேல் ஜேபி மோர்கன் வங்கியின் கிளைகளாக செயலாற்றும். தற்போதைய நிலையில், ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் பேங்கில் வைப்பு வைத்திருப்பவர்கள், இனிமேல் ஜேபி மோர்கன் வைப்பு தாரர்களாக கருதப்படுவர். ஜே பி மோர்கன் வங்கிக்கு அனைத்து வைப்புகளின் மீதும் முழு உரிமை வழங்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu