சென்னை ஃபோர்டு ஆலையை வாங்கும் ஜே எஸ் டபிள்யூ குழுமம்

August 30, 2023

சென்னையில் உள்ள ஃபோர்டு நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை ஜே எஸ் டபிள்யூ குழுமம் கையகப்படுத்த உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஃபோர்டு நிறுவன ஆலையில், மின்சார வாகன உற்பத்தியில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜே எஸ் டபிள்யூ குழுமத்தின் தலைவர் சாஜன் ஜிந்தால் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். கடந்த வாரம், மின்சார வாகனத்துறையில் ஈடுபடுவதற்காக, எம் ஜி மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்துடன் ஜே எஸ் டபிள்யூ குழுமம் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. மேலும், மின்சார வாகன […]

சென்னையில் உள்ள ஃபோர்டு நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை ஜே எஸ் டபிள்யூ குழுமம் கையகப்படுத்த உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஃபோர்டு நிறுவன ஆலையில், மின்சார வாகன உற்பத்தியில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜே எஸ் டபிள்யூ குழுமத்தின் தலைவர் சாஜன் ஜிந்தால் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

கடந்த வாரம், மின்சார வாகனத்துறையில் ஈடுபடுவதற்காக, எம் ஜி மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்துடன் ஜே எஸ் டபிள்யூ குழுமம் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. மேலும், மின்சார வாகன உற்பத்தியை தொடங்கும் பல்வேறு திட்டங்களில் பணியாற்ற தொடங்கி விட்டதாகவும் கூறப்பட்டது. அந்த வகையில், ஃபோர்டு நிறுவனத்தின் சென்னை ஆலை கையகப்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. முன்னதாக, கடந்த 2021 ஆம் ஆண்டு, டாடா குழுமத்தால் கையகப்படுத்தப்பட்ட ஃபோர்டு ஆலை, கடந்த ஜூலை 2022 முதல் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu