வியாழன் கோளின் மிகப்பெரிய நிலவு யூரோப்பா ஆகும். இந்த நிலவில் தண்ணீர் வளம் அதிகமாக உள்ளதாக ஏற்கனவே கண்டறியப்பட்டது. பூமியில் உள்ள தண்ணீரை விட 2 மடங்கு அதிகமாக யூரோப்பா நிலவில் உள்ள கடல்களில் தண்ணீர் உள்ளதாக கண்டறியப்பட்டது. எனவே, அங்கு உயிர் வாழ்வதற்கான சூழல் உள்ளதா என்பது குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது, அங்கு, எதிர்பார்த்ததை விட குறைவான அளவில் ஆக்சிஜன் உள்ளதாக விஞ்ஞானிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது.
வியாழன் கோளை ஆராய்வதற்காக ஜூனோ விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. இது வியாழன் கோள் பற்றிய பல்வேறு முக்கிய தகவல்களை அனுப்பி வருகிறது. அந்த தகவல்களை வைத்து ஆராய்ந்ததில், யூரோப்பா நிலவின் வளிமண்டலத்தில் உயிர் வாழ்வதற்கு தேவையான ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவை உள்ளன. ஆனால், அங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் அளவு வினாடிக்கு 12 கிலோ கிராம் அளவுக்கு மட்டுமே உள்ளது. இதற்கு முன், வினாடிக்கு 5 முதல் 1100 கிலோகிராம் வரையில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிகழலாம் என கணிக்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்ததை விட ஆக்சிஜன் உற்பத்தி குறைவாக நிகழ்வது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.