கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட பெண் டாக்டருக்கு நீதி கேட்டு பொதுமக்கள் பேரணி
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து, ஆயிரக்கணக்கானோர் 42 கி.மீ. தூரம் பேரணி நடத்தினர். இந்த பேரணியில், மருத்துவர்கள், பொதுமக்கள் மற்றும் பல தரப்பு மக்கள் ஒருங்கிணைந்து கலந்து கொண்டனர். ஹைலேண்ட் பூங்காவில் தொடங்கி, முக்கிய இடங்களை கடந்து, ஷியாம் பஜார் அருகே நிறைவடைந்தது. மேலும் எரியும் தீப்பந்தங்களை ஏந்திக் கொண்டு சென்றவர்கள், பெண்கள் பாதுகாப்பு மற்றும் நீதி கேட்டு குரலெழுப்பினர்.