கனடாவில் 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது இந்திய அரசு தனது செல்வாக்கை பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று விசாரணையில் தகவல் வந்துள்ளது.
கனடாவின் பாதுகாப்பு புலனாய்வு சேவையின் 2021 ஆம் ஆண்டின் தேர்தலின் போது இந்தியாவின் தலையீடு இருந்தது என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்தது. இந்நிலையில் தேர்தலில் வெளிநாடுகளின் தலையீடு குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க கனடா பிரதமர் ட்ருடோ குழு ஒன்றை அமைத்தார். அந்த குழு தேர்தல் ஆணைய அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் தலைவர்களை விசாரித்தது. இந்த விசாரணையில், வாக்கெடுப்புகளில் செல்வாக்கு செலுத்த இந்தியா முயற்சித்தது தொடர்பாக எந்த தகவலையும் மூத்த அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது இந்திய அரசு தனது செல்வாக்கை பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று விசாரணை குழுவிடம் தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.