வயநாடு நிலச்சரிவில் வீரத்துடன் செயல்பட்ட சபீனாவுக்கு கல்பனா சாவ்லா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள கூடலூர் செவிலியர் சபீனா, வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு ஜிப்லைன் மூலம் சிகிச்சை வழங்கிய குறும்படம் ஒளிபரப்பானது. இவரின் வீரச் செயலுக்கு பெரும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதையடுத்து, கல்பனா சாவ்லா விருது செவிலியர் சபீனாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று சுதந்திர தின விழாவில், சபீனாவுக்கு இந்த விருதினை வழங்கியுள்ளார். வயநாடு நிலச்சரிவில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் சிகிச்சை வழங்கிய வீரத்திற்கான விருதாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.