காவிரி நீர் விவகாரம்- கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம்

August 31, 2023

காவேரியில் இருந்து தமிழகத்திற்குரிய நீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டது. இதற்கு கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திற்குரிய நீரை கர்நாடக அரசு காவிரியில் இருந்து திறந்து விடவில்லை என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் கர்நாடக கர்நாடக அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் காவிரி மேலாண்மை ஆணையம் கூடியது. இதில் தமிழகத்திற்கு வினாடிக்கு 5000 கன […]

காவேரியில் இருந்து தமிழகத்திற்குரிய நீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டது. இதற்கு கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்திற்குரிய நீரை கர்நாடக அரசு காவிரியில் இருந்து திறந்து விடவில்லை என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் கர்நாடக கர்நாடக அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் காவிரி மேலாண்மை ஆணையம் கூடியது. இதில் தமிழகத்திற்கு வினாடிக்கு 5000 கன அடி நீர் வீதம் 15 நாட்களுக்கு செப்டம்பர் 12ஆம் தேதி வரை திறந்து விட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கு கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியவில் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, மெழுகுவத்தி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போரட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு பெற்ற சுயேட்சை எம்.எல்.ஏ தர்ஷன் புட்டனையாக ஆதரவு தெரிவித்துள்ளார். போராட்டத்தை தொடர்ந்து துணை முதல்வர் டி.கே சிவக்குமார் நாளை டெல்லி செல்ல இருக்கிறார். மேலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டால் அணைகள் நீர் இருப்பு குறைந்து குடிநீர் பற்றாகுறை ஏற்படும் நிலை உள்ளதால் தண்ணீர் திறந்து விட வாய்ப்பு இல்லை என முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu