கேரளம் ஆகிறது கேரளா - சட்டமன்றத்தில் தீர்மானம்

கேரள சட்டமன்றத்தில் கேரளா இனி கேரளம் என்று அழைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா இதுவரை கேரளா என்று அழைக்கப்பட்டு வருகிறது. இனி கேரளம் என்று அழைக்க வேண்டும் என மத்திய அரசிற்கு மாநில முதல்வர் பினராய் விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார் .மேலும் இதற்கான தீர்மானம் அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் இதே தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது தொழில்நுட்ப காரணத்திற்காக தடைபட்டது தற்போது மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 3ன் கீழ் கேரள […]

கேரள சட்டமன்றத்தில் கேரளா இனி கேரளம் என்று அழைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா இதுவரை கேரளா என்று அழைக்கப்பட்டு வருகிறது. இனி கேரளம் என்று அழைக்க வேண்டும் என மத்திய அரசிற்கு மாநில முதல்வர் பினராய் விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார் .மேலும் இதற்கான தீர்மானம் அம்மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் இதே தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது தொழில்நுட்ப காரணத்திற்காக தடைபட்டது தற்போது மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 3ன் கீழ் கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என திருத்தம் செய்ய மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அதன்படி அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் அனைத்து மொழிகளிலும் கேரளம் என மாற்றம் செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu