காட்டு யானைகளின் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் யானைகளை விரட்டும் சிறப்பு வகை தேனீக்கள் வளர்க்க கேரளா அரசு முடிவு செய்துள்ளது.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பல பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி உள்ளன. அங்கு வசிக்கும் மக்களின் குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானை, கரடி, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி புகுந்து மனிதர்கள் மற்றும் வளர்ப்பு பிராணிகளை கொன்றுவிடும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் வனப்பகுதியை ஒட்டி உள்ள பொதுமக்கள் வனவிலங்குகளின் அட்டகாசத்தை தவிர்க்க கேரளா அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தது. அதனை தொடர்ந்து கேரளா அரசு கட்டு யானைகளை விரட்டும் சிறப்பு வகை தேனீக்கள் வளர்க்க முடிவு செய்துள்ளது.