கேரள சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ், வயநாடு பயணிக்கையில் விபத்துக்குள்ளானார்.
கேரளாவில் கனமழை காரணமாக வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு 160 பேர் பலியாகினர். இந்நிலையில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வயநாடு சென்ற பொது அவரது கார் ஒரு லாரியுடன் மோதியதில், அவர் மற்றும் டிரைவர் காயமடைந்தனர். துரிதமாக, அவர்களை மீட்டு மஞ்சேரி மருத்துவ கல்லூரியில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.