இந்தியாவால் தேடப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்தியாவால் தேடப்படும் தீவிரவாதியான ஹர்தீப் சிங் நிஜர் பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்டவர். பஞ்சாப் ஜலந்தரில் இந்து மத போதகரை கொலை செய்ய திட்டமிட்டதாக காலிஸ்தான் புலி படை என்ற தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர்கள் 40 பேரை மத்திய புலனாய்வு அமைப்பு கடந்த ஆண்டு பயங்கரவாதிகளாக அறிவித்தது. இந்த அமைப்பின் தலைவராக ஹர்தீப் சிங் செயல்பட்டு வந்தார்.
ஹர்தீப் சிங் கனடா நாட்டில் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வந்தார். இந்நிலையில் ஹர்தீப்பை கைது செய்ய இந்திய அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் கனடாவின் சுரே பகுதியில் ஹர்தீப் மர்மநபரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.