கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறுநீரக கல் சிகிச்சை மையம் 

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரூ.2.30 கோடியில் சிறுநீரக கல் நீக்க சிகிச்சை மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மொபீஸ் இந்தியா பவுண்டேசன் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியின்கீழ் ரூ.2.30 கோடியில் ‘மின்காந்த அதிர்வலை சிறுநீரக கல் நீக்க சிகிச்சை மையம்’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சிகிச்சை மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், தமிழக பட்ஜெட்டில் அறிவித்தபடி, இந்த […]

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரூ.2.30 கோடியில் சிறுநீரக கல் நீக்க சிகிச்சை மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மொபீஸ் இந்தியா பவுண்டேசன் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியின்கீழ் ரூ.2.30 கோடியில் ‘மின்காந்த அதிர்வலை சிறுநீரக கல் நீக்க சிகிச்சை மையம்’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சிகிச்சை மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், தமிழக பட்ஜெட்டில் அறிவித்தபடி, இந்த மருத்துவமனையில் ரூ.125 கோடியில் டவர் பிளாக் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை சார்பில் ரூ.172 கோடியில் 442 படுக்கைகள் கொண்ட கட்டிடப் பணிகள் முடியும் நிலையில் உள்ளது. மேலும், இந்த மருத்துவமனையில் ரூ.28.02 கோடியில் தாய் - சேய் நல மையத்துக்கு கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu