இங்கிலாந்தில் மன்னர் சார்லஸ் புகைப்படத்துடன் புதிய கரன்சி நோட்டுகள் வெளியாகியுள்ளன.
எலிசபெத் ராணி மறைவுக்கு பிறகு பொறுப்பேற்ற மன்னர் சார்லஸ் -ன் புகைப்படத்துடன் புதிய பவுண்டுகள் வெளியாகும் என இங்கிலாந்து வங்கி ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி, வரும் ஜூன் மாதம் முதல் மன்னர் சார்லஸ் -ன் புகைப்படம் பொறிக்கப்பட்ட கரன்சி நோட்டுகள் புழக்கத்திற்கு வரும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. “இங்கிலாந்து நாட்டின் பவுண்டு மதிப்பில், 5, 10, 20 மற்றும் 50 ஆகிய நோட்டுகளில் மன்னர் சார்லஸ் -ன் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது. மேலும், எலிசபெத் ராணி புகைப்படத்துடன் புழக்கத்தில் உள்ள பவுண்டு நோட்டு பரிமாற்றங்கள் எந்த பாதிப்பும் இன்றி தொடரும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.