கிட்டு ராமகிருஷ்ணன் நெல்லை மாநகராட்சியின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நெல்லையில் மேயராக இருந்த இருந்த சரவணம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதனை தொடர்ந்து இன்று மறைமுக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நெல்லையில் புதிய மேயர் வேட்பாளராக கிட்டு ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.இந்நிலையில் இன்று காலை மேயர் தேர்தல் நடைபெற்றது. அதில் கிட்டு ராமகிருஷ்ணன் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற தனது கட்சிக்கு முக்கியமான வெற்றியை எடுத்துள்ளார். மேயராக பதவியேற்ற அவர், அடிப்படை வசதிகள், சுகாதார சேவைகள் மேம்பாடு மற்றும் கல்வி மேம்பாடு மீது கவனம் செலுத்துவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.