யுனெஸ்கோவின் இலக்கிய நகர அந்தஸ்தை பெற்றது கோழிக்கோடு

இந்தியாவிலேயே முதல்முறையாக இலக்கிய நகரம் என்ற அந்தஸ்தை கோழிக்கோடு பெற்றுள்ளது. கடந்த வருடம் கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு நகரம் இலக்கியங்களில் நகரம் என்ற அந்தஸ்தை பெறுவதாக யுனெஸ்கோ அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது கோழிக்கோட்டை இலக்கியங்களின் நகரமாக யுனெஸ்கோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கோழிக்கோடு நூற்றாண்டு காலங்களுக்கு முன்பு இருந்து இந்தியாவிற்கான நுழைவு வாயிலாக திகழ்ந்து வருகிறது. இங்கு பல்வேறு புத்தகத் திருவிழாக்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. மேலும் நவீன மலையாள இலக்கியத்தின் முன்னோடிகளான வைக்கம் […]

இந்தியாவிலேயே முதல்முறையாக இலக்கிய நகரம் என்ற அந்தஸ்தை கோழிக்கோடு பெற்றுள்ளது.

கடந்த வருடம் கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு நகரம் இலக்கியங்களில் நகரம் என்ற அந்தஸ்தை பெறுவதாக யுனெஸ்கோ அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது கோழிக்கோட்டை இலக்கியங்களின் நகரமாக யுனெஸ்கோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கோழிக்கோடு நூற்றாண்டு காலங்களுக்கு முன்பு இருந்து இந்தியாவிற்கான நுழைவு வாயிலாக திகழ்ந்து வருகிறது. இங்கு பல்வேறு புத்தகத் திருவிழாக்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. மேலும் நவீன மலையாள இலக்கியத்தின் முன்னோடிகளான வைக்கம் முகமது பஷீர், எஸ்.கே. பொட்டோகாட் உள்ளிட்ட பலரின் வதிவிடமாக கோழிக்கோடு இருந்து வருகிறது. மேலும் கோழிக்கோட்டில் பல தசாப்தங்களாக நடைபெறு வரும் புத்தகத் திருவிழாக்கள் மூலமாக இந்நகரை இலக்கிய வளம் நிறைந்ததாக மாற்றி உள்ளது. இதனால் கோழிக்கோடு இலக்கியங்களின் நகரமாக அந்தஸ்து பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூன் 23ஆம் தேதி கோழிக்கோட்டில் இலக்கிய நகரத்தின் நாள் வருடம் தோறும் கொண்டாடப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu