தமிழகத்தில் முன்மாதிரி கிராம விருதுக்கு குளூர் ஊராட்சி தேர்வு: புதுடில்லி யுனிசெப் அதிகாரிகள் ஆய்வு

October 12, 2022

தமிழகத்தில் முன்மாதிரி கிராம விருதுக்கு குளூர் ஊராட்சி தேர்வுசெய்யப்பட்டுள்ளது. இதனை புதுடில்லி யுனிசெப் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையால் தமிழகத்தில் முன்மாதிரி கிராம விருதுக்கு மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குளூர் ஊராட்சி தேர்வாகியுள்ளதாக மாநில அரசு அறிவித்தது. இந்நிலையில் டில்லி யுனிசெப் அதிகாரி மகாலட்சுமி தலைமையிலான அதிகாரிகள் கொண்ட குழுவினர் குளூர் ஊராட்சியில் சுகாதாரம் குறித்தும் பல்வேறு வளர்ச்சி நலத்திட்ட பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். […]

தமிழகத்தில் முன்மாதிரி கிராம விருதுக்கு குளூர் ஊராட்சி தேர்வுசெய்யப்பட்டுள்ளது. இதனை புதுடில்லி யுனிசெப் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையால் தமிழகத்தில் முன்மாதிரி கிராம விருதுக்கு மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குளூர் ஊராட்சி தேர்வாகியுள்ளதாக மாநில அரசு அறிவித்தது. இந்நிலையில் டில்லி யுனிசெப் அதிகாரி மகாலட்சுமி தலைமையிலான அதிகாரிகள் கொண்ட குழுவினர் குளூர் ஊராட்சியில் சுகாதாரம் குறித்தும் பல்வேறு வளர்ச்சி நலத்திட்ட பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், கிராமத்தின் வளர்ச்சி குறித்து யுனிசெப் அதிகாரிகள் பல இடங்களில் ஆய்வு செய்தனர். அதில் குளூர் ஊராட்சியில் ஆந்திராவில் இருந்து வரவழைக்கப்பட்ட 5,400 மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்ச்சி அடைந்து பசுமையாக மாறியதையடுத்து மாமரம், அத்திமரம், மகிழம், திருவோடு மரம், நாவல் உள்ளிட்ட பல்வேறு மரவகை கன்றுகள் வளர்ந்து நின்றதை கண்டனர். அனைத்து வீடுகளுக்கும் பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் வழங்கி மக்கும் குப்பை, மக்காத குப்பை என பொதுமக்களிடம் தரம் பிரித்து குப்பைகள் வாங்கி வருவதையும் யூனிசெப் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதியளிப்பு வேலை திட்டத்தின் கீழ் குளூர் ஊராட்சியில் இரண்டு தடுப்பணைகள் கட்டப்பட்டு தற்போது தண்ணீர் நிரம்பி வழிகிறது. ஊராட்சித் தலைவர் செல்வராஜ் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் அப்பகுதியில் மூன்று புதிய குளம் அமைக்கப்பட்டதையும் அக்குளத்தில் தற்பொழுது நீர் நிரம்பி இருப்பதையும் கண்டு யுனிசெப் அதிகாரிகள் வியந்தனர். குளூர் ஊராட்சியில் சுகாதாரம், குழந்தைகள் நலம், வளர்ச்சி திட்டப் பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து புதுடில்லி யுனிசெப் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu