நிலவில் ஆய்வுக் கூடம் அமைக்க இந்தியா திட்டம்

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு திருச்சியில் சமவேஷா 2024 கருத்தரங்கு நடைபெற்றது. இதில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு பேசினார். அப்போது, நிலவில் ஆய்வுக்கூடம் அமைக்க இந்தியா திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். “விண்வெளி துறையை பொருத்தவரை, மற்ற நாடுகளை விட இந்தியா பன்மடங்கு முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. இஸ்ரோவுக்கு துணையாக பல்வேறு கல்வி நிறுவனங்கள் ஆராய்ச்சிகளில் முக்கிய பங்களிப்பு வழங்கி வருகின்றன. குறிப்பாக, சந்திராயன் திட்டத்தில் நிலவின் மணல் பரப்பு குறித்த ஆராய்ச்சிகளுக்கு திருச்சி […]

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு திருச்சியில் சமவேஷா 2024 கருத்தரங்கு நடைபெற்றது. இதில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு பேசினார். அப்போது, நிலவில் ஆய்வுக்கூடம் அமைக்க இந்தியா திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

“விண்வெளி துறையை பொருத்தவரை, மற்ற நாடுகளை விட இந்தியா பன்மடங்கு முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. இஸ்ரோவுக்கு துணையாக பல்வேறு கல்வி நிறுவனங்கள் ஆராய்ச்சிகளில் முக்கிய பங்களிப்பு வழங்கி வருகின்றன. குறிப்பாக, சந்திராயன் திட்டத்தில் நிலவின் மணல் பரப்பு குறித்த ஆராய்ச்சிகளுக்கு திருச்சி என் ஐ டி யை சார்ந்த பேராசிரியர்கள் பங்களிப்பு வழங்கி உள்ளனர். குறைந்த பொருட் செலவில் இந்தியாவின் விண்வெளி சாதனைகள் இனிமேலும் தொடரும். நிலவில் சோதனை கூடம் அமைக்க இந்தியா திட்டமிட்டு வருகிறது” - இவ்வாறு அவர் பேசினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu