லட்சத்தீவு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நிறுத்திவைப்பு

January 31, 2023

லட்சத்தீவு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தில், கடந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில், முன்னாள் மத்திய மந்திரி பி.எம்.சயீதின் மருமகன் முகமது சாலியை கொலை செய்ய முயன்றதாக முகமது பைசல் உள்பட 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் எம்.பி. உள்பட 4 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடந்த 11-ந்தேதி லட்சத்தீவில் கவரட்டியில் உள்ள செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டது. தலா ரூ.1 லட்சம் […]

லட்சத்தீவு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தில், கடந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில், முன்னாள் மத்திய மந்திரி பி.எம்.சயீதின் மருமகன் முகமது சாலியை கொலை செய்ய முயன்றதாக முகமது பைசல் உள்பட 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் எம்.பி. உள்பட 4 பேருக்கும் தலா 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடந்த 11-ந்தேதி லட்சத்தீவில் கவரட்டியில் உள்ள செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டது. தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலே சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதி பதவி இழப்பார். இதையடுத்து முகமது பைசல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாகவும், லட்சத்தீவு தொகுதி காலியாக இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கிடைேய, தனது தகுதி நீக்கத்தை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் முகமது பைசல் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த ஐகோர்ட்டு, முகமது பைசல் மீதான குற்ற நிரூபணத்தையும், சிறைத்தண்டனையையும் நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், லட்சத்தீவுக்கான இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu