கனமழை எதிரொலி - குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே மண்சரிவு - போக்குவரத்து பாதிப்பு

January 10, 2024

நீலகிரி மாவட்டத்தில் 2 நாட்களாக பரவலான கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. குன்னூர் மேட்டுப்பாளையம் இடையில் உள்ள மலை பாதையில், நந்தகோபால் பாலம் பகுதி அருகே மண் சரிவு ஏற்பட்டு சாலையில் பாறைகள் விழுந்துள்ளன. இவற்றை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தீயணைப்புத் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். அதே வேளையில், தொடர்ந்து மழை […]

நீலகிரி மாவட்டத்தில் 2 நாட்களாக பரவலான கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், குன்னூர் மேட்டுப்பாளையம் இடையே மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.

குன்னூர் மேட்டுப்பாளையம் இடையில் உள்ள மலை பாதையில், நந்தகோபால் பாலம் பகுதி அருகே மண் சரிவு ஏற்பட்டு சாலையில் பாறைகள் விழுந்துள்ளன. இவற்றை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தீயணைப்புத் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். அதே வேளையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீண்டும் மண்சரிவு அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். அத்துடன், கடும் பனிமூட்டம் காணப்படுவதால், வாகனங்களை இயக்குபவர்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu