சீனாவின் தென்மேற்கு பகுதியில் நெடுஞ்சாலை ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இரண்டு பேர் பலியாகினர். 17 பேர் மாயமாகியுள்ளனர்.
சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் கார்ஸ் பகுதி அமைந்துள்ளது. இது இமயமலையின் அடிவாரத்தில் உள்ளது. இந்தப் பகுதியில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக வீடுகள் இடிந்து விழுந்தன. நெடுஞ்சாலை பாலம் இடிந்து விழுந்தது. இந்த நிலச்சரிவில் இரண்டு பேர் பலியாகினர். 17 பேர் காணாமல் போயுள்ளனர்.
அதோடு பாலத்தின் மீது சென்ற மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானது. அதில் ஒருவர் மீட்கப்பட்டார். ஐந்து பேரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர். கடந்த மே மாதம் அதிக கனமழை காரணமாக நெடுஞ்சாலை இடிந்து விழுந்ததில் 48 பேர் பலியாகினர். கடந்த நான்கு மாதங்களில் மழை காரணமாக ஏற்பட்ட நெடுஞ்சாலை விபத்துகளில் சுமார் 80க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.