இந்தியாவின் முதல் தனியார் மலைவாசஸ்தலமாக லவாசா வரலாற்றில் இடம்பெற உள்ளது. தற்போது இது 1814 கோடி ரூபாய்க்கு டார்வின் பிளாட்பார்ம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது. தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. மேலும், 8 ஆண்டுகளில் இந்த தொகை செலுத்தப்படும் என அறிவித்துள்ளது. மேலும், மொத்த தொகையில் 929 கோடி ரூபாய் டார்வின் பிளாட்பார்ம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்திடம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
லவாசா மலைவாச தலத்தில் வீடுகளை வாங்க விண்ணப்பித்தவர்களில் 837 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் கூறியுள்ளது. அவர்களுக்கு, 438 கோடி மதிப்பில், முழுவதும் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் வழங்கப்படும் என கூறியுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் வீடுகள் ஒப்படைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. புனே நகருக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள முல்சி பள்ளத்தாக்கில் லவாசா அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது