தைவானில் மாநாட்டை புறக்கணிக்க 6 நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது.
தைவான் நாட்டை தன் நாட்டிற்குள் இணைத்துக் கொள்ள சீனா விரும்பாதால் தைவான் உடன் வேறு எந்த நாடுகளும் அதிகாரப்பூர்வ உறவு வைத்துக் கொள்வதை அந்த நாடு விரும்பவில்லை. இந்நிலையில் சர்வதேச உச்சி மாநாடு அடுத்த வாரம் தைவானில் நடைபெற உள்ளது. இதில் 25க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொள்ளும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில், கொலம்பியா, பொலிவியா, ஸ்லோவாக்யா உட்பட 6 நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது. அதில் தைவான் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என்று சீன தரப்பில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.