தாய்லாந்தில் ஒரே பாலின திருமணத்தை ஆதரிக்கும் மசோதா நிறைவேற்றம்

March 28, 2024

ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா பெரும்பான்மை எம்பிக்கள் ஆதரவுடன் தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. தாய்லாந்து சிறந்த சுற்றுலா தளமாக விளங்குகிறது. அது கேளிக்கைகளுக்கு பெயர் பெற்ற நாடாகவும் உள்ளது. அங்கு ஓரின சேர்க்கையாளர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். எனினும் அவர்களின் திருமணத்திற்கு அங்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இந்நிலையில், ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கும் சட்ட மசோதாவை ஏற்ற தாய்லாந்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வந்தது. இதையடுத்து பாராளுமன்றத்தில் நேற்று இந்த மசோதா […]

ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா பெரும்பான்மை எம்பிக்கள் ஆதரவுடன் தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

தாய்லாந்து சிறந்த சுற்றுலா தளமாக விளங்குகிறது. அது கேளிக்கைகளுக்கு பெயர் பெற்ற நாடாகவும் உள்ளது. அங்கு ஓரின சேர்க்கையாளர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். எனினும் அவர்களின் திருமணத்திற்கு அங்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இந்நிலையில், ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கும் சட்ட மசோதாவை ஏற்ற தாய்லாந்தில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வந்தது. இதையடுத்து பாராளுமன்றத்தில் நேற்று இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக எதிர்க்கட்சி உட்பட பெரும்பான்மையான எம்பிக்கள் வாக்களித்தனர். தாய்லாந்து பாராளுமன்றம் 415 எம்பிக்கள் எண்ணிக்கை கொண்டது. இதில் 10 பேர் மட்டுமே மசோதாவை எதிர்த்தனர். இந்நிலையில் பெரும்பான்மை எம்பிக்கள் ஆதரவுடன் ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

மன்னரின் ஒப்புதல் பெற்ற பின்னர் இது அமலுக்கு வர உள்ளது. இதன் மூலம் நேபாளம், தைவான் போன்ற நாடுகளை தொடர்ந்து ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கு அனுமதி அளிக்கும் நாடாக தாய்லாந்து உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu