லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 23 சிரியா தொழிலாளர்கள் பலியாகினர்.
இஸ்ரேல் பாதுகாப்பு படை காசா மற்றும் லெபனானை இலக்காக வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று வரை, லெபனானில் பலியானோரின் எண்ணிக்கை 558 ஆக உயர்ந்துள்ளது. அதில் 50 குழந்தைகள் அடங்குவர். மேலும், 1,835 பேர் காயமடைந்துள்ளனர் என லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. லெபனான், சிரியா எல்லைக்கு அருகிலுள்ளது. மேலும் பெகா பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பழமையான பால்பெக் நகரில் நேற்றிரவு இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டது. இந்த வான்வழி தாக்குதலில், சிரியாவை சேர்ந்த தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடம் கடுமையாக பாதிக்கப்பட்டு, 23 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 8 பேரில் 4 பேர் சிரியாவைச் சேர்ந்தவர்கள். மற்ற 4 பேர் லெபனானைச் சேர்ந்தவர்கள் என்று லெபனான் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.