நேற்று வாக்கி டாக்கிகள் மீண்டும் ஒரே நேரத்தில் வெடித்து 14 பேர் பலியாகி, 450 பேர் காயமடைந்ததாக லெபனானின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
லெபனானில் செயல்படும் ஹிஜ்புல்லா அமைப்பினர், செல்போன்களை தவிர்க்க பேஜர் கருவிகளை தகவல் தொடர்புக்கு பயன்படுத்துகிறார்கள். இதனால் தங்கள் இருப்பிடம் பற்றிய விவரங்கள் வெளிவரும் வாய்ப்பு குறைகிறது. இந்த அமைப்பு இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது. கடந்த நாளில், ஒரே நேரத்தில் பேஜர் உபகரணங்கள் வெடித்து 12 பேர் உயிரிழந்தும், 2,800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பின், நேற்று வாக்கி டாக்கிகள் மீண்டும் ஒரே நேரத்தில் வெடித்து 14 பேர் பலியாகி, 450 பேர் காயமடைந்ததாக லெபனானின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்கிடையில், செஞ்சிலுவை சங்கத்தின் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தெற்கு லெபனான், பெய்ரூட் மற்றும் மத்திய பெக்கா பகுதியில் 30-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் பணியாற்றி வருகின்றனர். இச்சம்பவத்தில் 60 வீடுகள் மற்றும் கடைகளில் தீ பரவியது.