லெனோவா நிறுவனம் புதிதாக டிரான்ஸ்பரென்ட் டிஸ்ப்ளே உடன் கூடிய லேப்டாப் ஒன்றை வடிவமைத்துள்ளது. இதன் கான்செப்ட் வடிவம் பார்சிலோனாவில் நடைபெற்று வரும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் வெளியிடப்பட்டுள்ளது. இது லெனோவா திங்க்பேட் என அழைக்கப்படுகிறது.
மைக்ரோ எல் இ டி தொழில்நுட்பம் மூலம், டிரான்ஸ்பரென்ட் டிஸ்ப்ளே உருவாக்கப்பட்டுள்ளது. கண்ணாடி போன்ற இந்த டிஸ்ப்ளேவில், லேப்டாப்பின் பின்புறம் உள்ள காட்சிகளையும் காணமுடியும். இந்த லேப்டாப்பில் டிரான்ஸ்பரென்ட் கீபோர்டு வசதியும் கொண்டு வரப்படுகிறது. மைக்ரோ எல் இ டி தொழில் நுட்பத்தின் மூலம், உண்மைக்கு நிகரான வண்ணங்கள் காட்டப்படுகின்றன. அத்துடன், இந்த லேப்டாப்பில் 1000 நிட் பிரைட்னஸ் உள்ளதால், நேரடி சூரிய வெளிச்சத்தில் கூட காட்சிகளை தெளிவாக காண முடியும்.