லெனோவா நிறுவனம், இந்தியாவின் புதுச்சேரியில் செயற்கை நுண்ணறிவு (AI) சேவையகங்களை (சர்வர்கள்) தயாரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும், பெங்களூரில் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மையத்தை நிறுவுவதற்கான திட்டங்களையும் லெனோவா அறிவித்துள்ளது.
வரும் 2027 ஆம் ஆண்டளவில் செயற்கை நுண்ணறிவு சேவையகங்களுக்கான உலகளாவிய சந்தை மதிப்பு 150 பில்லியன் டாலர்களை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தைவான் போன்ற நாடுகள் ஏற்கனவே இந்தத் துறையில் முன்னணியில் இருந்தாலும், இந்தியா போன்ற நாடுகள் இதில் புதிய போட்டியாளர்களாக உருவாகி வருகின்றன. அந்த வகையில், லெனோவாவின் இந்த முடிவு, இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு மட்டுமல்லாமல், உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் துறைக்கு பங்களிப்பு செய்யும் வகையில் அமைகிறது.