இந்தியாவின் மிகப்பெரிய வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்தியாளரான எல்ஜி, மேலும் 200 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், பிரீமியம் ரக ஃபிரிட்ஜ் உற்பத்திக்காக இந்த முதலீடு செய்யப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி, மகாராஷ்டிராவில் உள்ள புனே உற்பத்தி ஆலையில், டபுள் டோர் மற்றும் சிங்கிள் டோர் ஃபிரிட்ஜ்கள் உருவாக்கப்பட உள்ளன.
இதுகுறித்து பேசிய எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹாங் ஜூ ஜியொன், “கடந்த ஆண்டு நொய்டாவில் இன்வெர்ட்டர் ஏசி உற்பத்தியை தொடங்கினோம். தற்போது, புனையில் ஃபிரிட்ஜ் உற்பத்தி தொடங்கப்பட உள்ளது. விரைவில், இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளோம்” என்று கூறினார்.