எல்ஐசி நிறுவனத்தின் முதல் தலைமை செயல் அதிகாரியாக சித்தார்த்தா மோகன்டி நியமிக்கப்பட்டுள்ளார். வரும் ஜூன் 2024 முதல் ஜூன் 2025 வரையில், அவரது பதவி காலம் இருக்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால், அவர் கடந்த மார்ச் முதல் நிறுவனத்தின் இடைக்கால சேர்மன் ஆக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல் ஐ சி, கடந்த வருட மே மாதம், பொது பட்டியலில் இடம் பிடித்தது. பொதுத்துறை நிறுவனமாக தன்னை வியாபித்துள்ள எல்ஐசி, மற்ற பொதுத்துறை நிறுவனங்களை போலவே செயல்படுவதற்கு ஏதுவாக, சேர்மன் பொறுப்பை தலைமை செயல் அதிகாரியாக மாற்றியமைக்கிறது. அந்த வகையில், தற்போதைய சேர்மன் சித்தார்த் மோகன்டி, எல் ஐ சி யின் முதல் தலைமை செயல் அதிகாரியாக பதவி ஏற்க உள்ளார்.