தரமற்ற மருந்து பொருட்களை உற்பத்தி செய்தவாக எழுந்த புகாரின் பேரில் 18 பார்மா நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்ய உத்தரவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுதும் 20 மாநிலங்களில் 76 மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தரமற்ற மருந்து பொருட்களை உற்பத்தி செய்வதாக எழுந்த புகாரில் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு சோதனை நடத்தியது. இதில் 16 நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் மருந்து பொருட்கள் தரமற்றதாக இருந்தது உறுதியானது. இதையடுத்து இந்நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்ய உத்தரவிட்டு, மேலும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.