பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மதுபான கடைகளை மூட உத்தரவு

March 22, 2024

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏப்ரல் 17ஆம் தேதி மாலை 6 மணி முதல் 19 ஆம் தேதி மாலை 6 மணி வரை மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்களவை […]

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஏப்ரல் 17ஆம் தேதி மாலை 6 மணி முதல் 19 ஆம் தேதி மாலை 6 மணி வரை மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதியும் சட்டமன்றத் தேர்தலில் இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் ஜூன் 2 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் ஏப்ரல் 17ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி மாலை 6 மணி வரை மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போல் வாக்கு எண்ணிக்கை நாள் அன்றும் மது கடைகள் மூடப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu