இந்திய பங்குச் சந்தையில் தொடர் சரிவு போக்கு காணப்படுகிறது. நேற்று 300 புள்ளிகள் வரை இழந்த சென்செக்ஸ், இன்று 200 புள்ளிகளை இழந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர இறுதியில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 202.36 புள்ளிகள் இழந்து 64948.66 புள்ளிகளாக உள்ளது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 55.10 புள்ளிகள் இழந்து 19310.15 புள்ளிகளாக உள்ளது.
அதானி நிறுவனத்தில் ஜி.க்யு.ஜி பார்ட்னர்ஸ் முதலீடு செய்துள்ளது, இன்றைய பங்குச் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன்படி, அதானி குழும பங்குகள் மிகப்பெரிய உயர்வை பதிவு செய்துள்ளன. அதானி குழுமத்தை சேர்ந்த 10 பங்குச் சந்தை பட்டியல் நிறுவனங்களும் இன்று ஏற்றத்தை பதிவு செய்துள்ளன. குறிப்பாக, அதானி எண்டர்பிரைசஸ் 3.9% உயர்ந்து வர்த்தகமாகியுள்ளது. இது தவிர, மாருதி சுசுகி, ஈச்சர் மோட்டார்ஸ், ரிலையன்ஸ், எஸ் பி ஐ, ஐ டி சி ஆகிய நிறுவனங்களும் ஏற்றமடைந்துள்ளன. அதே வேளையில், ஹீரோ மோட்டோகார்ப், கோல் இந்தியா, டி சி எஸ், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், என் டி பி சி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவை இறக்கமடைந்துள்ளன.