பெங்களூரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான 60 இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
கர்நாடக அரசு அதிகாரிகள் 13 பேர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லோக் ஆயுக்தா அதிகாரிகளுக்கு புகார் எழுந்தது. இதனால் கர்நாடக அரசு அதிகாரிகளின் வீடு, உறவினர்கள் வீடு, அலுவலகம் என 60 இடங்களுக்கு மேல் லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் தங்கம், வெள்ளி பொருள்கள், பணம் போன்றவை கிடைத்துள்ளது. இந்த திடீர் சோதனை பற்றி அதிகாரிகளுக்கு முன்கூட்டிய தகவல் ஏதும் அளிக்கப்படாமல் ரகசியமாக சோதனை நடத்தினர். இந்த சோதனையானது பெங்களூர், மைசூர், உடுப்பி, உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்றது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு நோட்டீஸ் அனுப்பவும் லோக் ஆயுக்தா போலீசார் தயாராகி வருகின்றனர்.