மதுரை குருவாயூர் இடையே, 3 ரயில்களை இணைத்து ஒரே ரயில் சேவை

August 21, 2023

மதுரை குருவாயூர் இடையே, மதுரை விரைவு ரயில் என்ற பெயரில் புதிய ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இது, தற்போது தினசரி முறையில் இயக்கப்படும் 3 ரயில்களை ஒன்றிணைத்து ஒரே ரயில் சேவையாக இயக்கப்பட உள்ளது. வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் இந்த ரயில் சேவை தொடங்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தினசரி முறையில் இயக்கப்படும் குருவாயூர் புனலூர் விரைவு ரயில், மதுரை செங்கோட்டை விரைவு ரயில் மற்றும் செங்கோட்டை கொல்லம் விரைவு […]

மதுரை குருவாயூர் இடையே, மதுரை விரைவு ரயில் என்ற பெயரில் புதிய ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இது, தற்போது தினசரி முறையில் இயக்கப்படும் 3 ரயில்களை ஒன்றிணைத்து ஒரே ரயில் சேவையாக இயக்கப்பட உள்ளது. வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் இந்த ரயில் சேவை தொடங்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினசரி முறையில் இயக்கப்படும் குருவாயூர் புனலூர் விரைவு ரயில், மதுரை செங்கோட்டை விரைவு ரயில் மற்றும் செங்கோட்டை கொல்லம் விரைவு ரயில் ஆகிய 3 ரயில்களையும் ஒன்றிணைத்து, ‘மதுரை விரைவு ரயில்’ என்ற பெயரில், மதுரை குருவாயூர் இடையே ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இது மதுரையில் இருந்து காலை 11:20 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 2:10 மணிக்கு குருவாயூர் சென்றடையும். அதே வேளையில், மறு மார்க்கத்தில், குருவாயூரில் அதிகாலை 5:50 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் இரவு 7:50 மணிக்கு மதுரை வந்தடையும். இந்த ரயில், திருப்பரங்குன்றம், திருமங்கலம், கல்லக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் வழியாக குருவாயூர் சென்றடையும் என கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu