ஜப்பானில் 6.1 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள இவாதே மற்றும் ஆமோரி மாகாணங்களில் நேற்று நள்ளிரவு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது என்று ஜப்பான் நாட்டு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கம் வட கடலோர பகுதியில் மையம் கொண்டிருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதாரம் குறித்த தகவல் எதுவும் இதுவரை வரவில்லை.
.