சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகாவிஷ்ணு சர்ச்சை காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னையின் சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகரில் பரம்பொருள் பவுண்டேஷன் என்ற அமைப்பின் சார்பில் மாணவ-மாணவிகளை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி குறித்து பேசிய மகாவிஷ்ணு, மூடநம்பிக்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குறித்த சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்தார். இதனால், பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் எழுந்தது. சைதாப்பேட்டை போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் இயக்குனர் கண்ணப்பன் விசாரணை நடத்த உத்தரவிட்டனர். இந்த விவகாரம் தொடர்பான அறிக்கை, பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு வழங்கப்பட்டது, மேலும் இந்த சர்ச்சை காரணமாக சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்