மஹிந்திரா அண்ட் மஹிந்திரா வாகன நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. மிகவும் சாதகமான முறையில் வெளியான இந்த முடிவுகளால், இன்றைய வர்த்தகத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் பங்கு மதிப்பு கிட்டத்தட்ட 7.6% அளவுக்கு உயர்ந்தது. மேலும், வரலாற்று உச்சபட்ச பங்கு மதிப்பை பதிவு செய்தது.
இன்று காலை முதலே மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்ந்து வந்தது. இன்றைய வர்த்தக நாளின் முடிவில், மஹிந்திரா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2514.6 ரூபாய் அளவில் உள்ளது. இந்த வர்த்தக நாளின் இடையில் 2554.75 ரூபாய் அளவுக்கு பங்கு மதிப்பு உயர்ந்தது. இது வரலாற்று உச்சபட்ச பங்கு மதிப்பாகும்.