மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சீனாவின் ஷான்சி ஆட்டோமொபைல் குழுமத்துடன் இணைந்து இந்தியாவில் கார் உற்பத்தி ஆலையை உருவாக்க உள்ளதாக ராய்ட்டர்ஸ் தலத்தில் செய்தி வெளியானது. மேலும், இந்த திட்டத்திற்காக 3 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாகவும், இந்த கூட்டு முயற்சிக்கான அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக மஹிந்திரா காத்திருப்பதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தியில் கூறப்பட்டது. மஹிந்திரா நிறுவனம் இந்த செய்தியை "ஆதாரமற்றது" என்று கூறி, மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த மறுப்பு இருந்தபோதிலும், பிஎஸ்இ சென்செக்ஸில் மஹிந்திரா பங்குகள் 2.5% உயர்ந்துள்ளன. ராய்ட்டர்ஸ் செய்தியால் ஏற்பட்ட குறுகிய கால ஏற்ற இறக்கங்கள் காரணமாகவும், முதலீட்டாளர்கள் இந்த செய்தியை ஒரு நேர்மறையான அறிகுறியாகக் கருதியதாலும் இது ஏற்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.