மக்களவை இடைக்கால சபாநாயகர் ஆக பதவியேற்றார் மஹ்தாபு

மக்களவை தற்காலிக சபாநாயகர் ஆக மஹ்தாபு பதவியேற்றுள்ளார். நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் நான்காம் தேதி வெளியிடப்பட்டதில் பா. ஜனதா கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. அதனை அடுத்து பிரதமர் மோடி கடந்த ஒன்பதாம் தேதி மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ளார். அவருடன் 72 மத்திய மந்திரிகளும் பதவி ஏற்றுள்ளனர். அதனை அடுத்து இன்று காலை பதினெட்டாவது பாராளுமன்றம் கூடுகிறது. பாராளுமன்றத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 543 எம்பிகளுக்கு பதவி பிரமாணம் செய்து […]

மக்களவை தற்காலிக சபாநாயகர் ஆக மஹ்தாபு பதவியேற்றுள்ளார்.

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் நான்காம் தேதி வெளியிடப்பட்டதில் பா. ஜனதா கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. அதனை அடுத்து பிரதமர் மோடி கடந்த ஒன்பதாம் தேதி மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ளார். அவருடன் 72 மத்திய மந்திரிகளும் பதவி ஏற்றுள்ளனர். அதனை அடுத்து இன்று காலை பதினெட்டாவது பாராளுமன்றம் கூடுகிறது. பாராளுமன்றத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 543 எம்பிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. அதன்படி புதிய உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பதற்கு தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மஹ்தாப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து எம்பிக்களுக்கு இவர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu