இஓஎஸ் 06 செயற்கைக்கோள் எடுத்த பூமியின் புகைப்படங்கள் - இஸ்ரோ பகிர்வு

பூமியில் உள்ள பெருங்கடல்களை ஆராய்வதற்காக, இந்தியா, இஓஎஸ் 06 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி இருந்தது. தற்போது, இந்த செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நேற்று இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட இந்த புகைப்படங்களில், முற்றிலும் புதிதான நிறங்களில் உலகின் பல பகுதிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. செயற்கைக்கோளில் உள்ள ஓசன் கலர் மானிட்டர் எனப்படும் சென்சார் மூலம், இந்த புதிய நிறங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும், செயற்கைக்கோள் அனுப்பிய புகைப்படங்களை தேசிய தொலை உணர்வு […]

பூமியில் உள்ள பெருங்கடல்களை ஆராய்வதற்காக, இந்தியா, இஓஎஸ் 06 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி இருந்தது. தற்போது, இந்த செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நேற்று இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட இந்த புகைப்படங்களில், முற்றிலும் புதிதான நிறங்களில் உலகின் பல பகுதிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. செயற்கைக்கோளில் உள்ள ஓசன் கலர் மானிட்டர் எனப்படும் சென்சார் மூலம், இந்த புதிய நிறங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும், செயற்கைக்கோள் அனுப்பிய புகைப்படங்களை தேசிய தொலை உணர்வு மையம் மொசைக் பாணியில் வெளியிட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 1 முதல் 15ஆம் தேதி வரை எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படங்களை ஒன்றிணைத்து இந்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அத்துடன், 300 ஜிபி அளவிலான, 2939 புகைப்படங்கள் இணைக்கப்பட்டு, இந்த ஒற்றை புகைப்படம் உருவாக்கப்பட்டதாக கூறியுள்ளது. மேலும், செயற்கைக்கோளில் உள்ள ஓசன் கலர் மானிட்டர் சென்சார் மூலம் 13 வெவ்வேறு அலை நீளங்களில் பூமி கண்காணிக்கப்படுவதாகவும், அதன் காரணமாகவே நிலப்பகுதிகள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறக் கோர்வையில் தெரிவதாகவும் கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu