மலேசிய அரசாங்கம் செப்டம்பர் 1, 2024 முதல் வெளிநாட்டவர்களுக்கான விசா கட்டணத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது. இந்த உயர்வு இந்தியாவைப் போன்ற நாடுகளிலிருந்து மலேசியாவுக்கு வரும் தொழிலாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
முக்கிய மாற்றங்கள்:
பணி விசா: முன்பு MYR 800 ஆக இருந்த பணி விசா கட்டணம் இப்போது MYR 2,000 ஆக அதிகரித்துள்ளது. இது 150% உயர்வு.
சார்பு விசா: சார்பு விசா கட்டணம் MYR 450 ல் இருந்து MYR 500 ஆக உயர்ந்துள்ளது.
ப்ரொபஷனல் விசிட் பாஸ்: இந்த பாஸின் கட்டணம் MYR 800 ல் இருந்து MYR 1,200 ஆக உயர்ந்துள்ளது.
நீண்ட கால சமூக வருகை விசா: இந்த விசா கட்டணம் MYR 450 ல் இருந்து MYR 500 ஆக உயர்ந்துள்ளது.
இந்த கட்டண உயர்வுடன், அடுக்கு 1, அடுக்கு 2 மற்றும் முக்கியமான துறை நிறுவனங்களுக்கான செயலாக்க நேரம் ஐந்திலிருந்து மூன்று நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் சுமார் 150,000 இந்திய தொழிலாளர்கள் உள்ளனர். இந்த விசா கட்டண உயர்வு அவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை கணிசமாக பாதிக்கும்.