சீனாவுடன் ராணுவ ஒப்பந்தம் - இந்திய இராணுவத்தினர் மாலத்தீவில் இருந்து வெளியேற உத்தரவு

March 5, 2024

மாலத்தீவு சீனாவுடன் முக்கிய ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மேலும், அதைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்தினர் மாலத்தீவில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் மே மாதம் 10ம் தேதிக்குள் இந்திய துருப்புகள் அனைத்தும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ராணுவ உடை மட்டுமின்றி சாமானிய மனிதனின் உடையில் கூட இந்திய ராணுவத்தினர் மாலத்தீவில் இருக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவு அதிபர் முஹம்மது மூசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும், சீன நாட்டிடம், இந்திய ராணுவத்தை சேர்ந்த […]

மாலத்தீவு சீனாவுடன் முக்கிய ராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மேலும், அதைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்தினர் மாலத்தீவில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வரும் மே மாதம் 10ம் தேதிக்குள் இந்திய துருப்புகள் அனைத்தும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ராணுவ உடை மட்டுமின்றி சாமானிய மனிதனின் உடையில் கூட இந்திய ராணுவத்தினர் மாலத்தீவில் இருக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவு அதிபர் முஹம்மது மூசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும், சீன நாட்டிடம், இந்திய ராணுவத்தை சேர்ந்த ஒருவர் கூட மே 10 க்கு பிறகு மாலத்தீவில் இருக்க மாட்டார்கள் என உறுதி அளித்துள்ளார். ஏற்கனவே. மார்ச் 10 ஆம் தேதிக்குள் இந்திய ராணுவத்தினரை திரும்ப பெறுவதாக இந்தியா மற்றும் மாலத்தீவு இடையே உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu