மாலத்தீவு அதிபர் - வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

August 12, 2024

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாலத்தீவு அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 3 நாள் அரசு பயணமாக மாலத்தீவு சென்றுள்ளார். அங்கு அவர் மாலத்தீவு அதிபர் முகமது மூய்சுவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். இதுகுறித்து அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கிய நட்பு நாடாக மாலத்தீவு திகழ்கிறது. மாலத்தீவின் பங்கு இன்றியமையாதது. எனவே இரு […]

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாலத்தீவு அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 3 நாள் அரசு பயணமாக மாலத்தீவு சென்றுள்ளார். அங்கு அவர் மாலத்தீவு அதிபர் முகமது மூய்சுவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கிய நட்பு நாடாக மாலத்தீவு திகழ்கிறது. மாலத்தீவின் பங்கு இன்றியமையாதது. எனவே இரு தரப்பு உறவுகளை நவீனப்படுத்துவதில் நாங்கள் உறுதி கொண்டு உள்ளோம் என்றார். அட்டு நகர கடற்கரை மறு சீரமைப்பு திட்டம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதிக்கான நான்குவழிச்சாலை திட்டம் ஆகியவற்றின் தொடக்க விழாவில் மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மூஸா சமீர் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்றனர். மாலத்தீவின் சுற்றுலாத்துறை உட்பட பல்வேறு துறைகளில் இந்தியாவின் முதலீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அட்டு சாலை திட்டத்திற்கு இந்தியா 560 கோடியை வழங்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்திய உதவியுடன் மால்தீவில் சுமார் 65 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் மூலம் மாலத்தீவின் பொருளாதாரம் சிறப்பாக முன்னேறும் என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu