இந்தியா கடன் நிவாரணம் அளிக்க மாலத்தீவு அதிபர் வேண்டுகோள்

March 23, 2024

மாலத்தீவுக்கு இந்தியா கடன் நிவாரணம் அளிக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் மூயிஸ் கேட்டுக் கொண்டுள்ளார். மாலத்தீவுக்கு மருத்துவ உதவி மற்றும் இரண்டு ஹெலிகாப்டர்கள், ஒரு டார்னியர் சிறிய ரக விமானம் ஆகியவற்றை இந்தியா வழங்கியது. அவற்றை பராமரித்து இயக்குவது தொடர்பாக 90 இந்திய ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். அந்த வீரர்களை திரும்பப் பெறுமாறு மூயிஸ் இந்திய அரசிடம் வலியுறுத்தினார். இதனால் இந்தியா மாலத்தீவு இடையே விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அந்நாட்டில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் […]

மாலத்தீவுக்கு இந்தியா கடன் நிவாரணம் அளிக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் மூயிஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

மாலத்தீவுக்கு மருத்துவ உதவி மற்றும் இரண்டு ஹெலிகாப்டர்கள், ஒரு டார்னியர் சிறிய ரக விமானம் ஆகியவற்றை இந்தியா வழங்கியது. அவற்றை பராமரித்து இயக்குவது தொடர்பாக 90 இந்திய ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். அந்த வீரர்களை திரும்பப் பெறுமாறு மூயிஸ் இந்திய அரசிடம் வலியுறுத்தினார். இதனால் இந்தியா மாலத்தீவு இடையே விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அந்நாட்டில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் அடங்கிய முதல் குழு தாயகம் திரும்பியது. வரும் மே பத்தாம் தேதிக்குள் அனைத்து ராணுவ வீரர்களும் இந்தியா திரும்புவார்கள் என்று மாலத்தீவு வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

இந்நிலையில் அதிபர் மூயிஸ் கூறியதாவது, மாலத்தீவின் தேசிய பாதுகாப்பு கருதிதான் இந்திய வீரர்கள் வெளியேற வேண்டும் என்று கூறினேன். இந்தியா மட்டுமின்றி வேற எந்த நாடாக இருந்தாலும் இதைத்தான் நான் கூறியிருப்பேன். இதில் எந்த தனிப்பட்ட காரணமும் இல்லை. இதையேதான் முன்னாள் அதிபர் அப்துல்லா நிர்வாகமும் கூறியது. எங்களுடைய நெருங்கிய கூட்டாளியாக இந்தியா நீடிக்கும். மாலத்தீவுக்கு இந்திய அரசு பல உதவிகள் செய்துள்ளது. மாலத்தீவில் ஏராளமான திட்டங்களை இந்தியா நிறைவேற்றியுள்ளது. இந்தியாவிடம் இருந்து மாலத்தீவு கடன் பெற்றுள்ளது. மாலத்தீவின் பொருளாதாரத்தால் அதனை தாங்க முடியவில்லை. எனவே கடனை குறைத்தல் அல்லது கடனுக்கான வட்டிவிகிதங்கள், கடனை திருப்பி செலுத்துவதற்கான காலத்தை திருத்தி அமைத்தல் போன்ற வழிகளில் மாலத்தீவுக்கு இந்தியா கடன் நிவாரணம் அளிக்க வேண்டும். இந்த கோரிக்கையை இந்திய அரசு ஏற்கும் என்று நம்புகிறேன். மாலத்தீவின் பொருளாதார நிலைக்கு ஏற்ப கடனை திரும்பி வழங்குவது குறித்து இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன் என்றார். சுமார் 3348 கோடி கடனாக இந்தியாவுக்கு மாலத்தீவு திருப்பி செலுத்த வேண்டி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu