டெல்லி மெட்ரோவில் மொபைல் செயலி மூலம் சில்லறை வர்த்தகம் செய்ய திட்டம்

June 22, 2023

டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன், மெட்ரோ ரயிலை ஒரு வணிக வளாகமாக மாற்றும் வர்த்தகத் திட்டம் ஒன்றில் பணியாற்றி வருகிறது. அதன்படி, Momentum 2.0 என்ற செயலி உருவாக்கப்பட்டு, அதன் மூலம் பல்வேறு பொருட்கள் ரயில் பயணிகளுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. ரயில் பயணங்களின் போது, பயணிகள் இந்த செயலி மூலம் பொருட்களை ஆர்டர் செய்தால், அவர்கள் தாங்கள் இறங்கும் ரயில் நிலையங்களில் அவற்றை பெற்றுக் கொள்ளலாம். இந்த செயலி, வரும் ஜூலை மாதம் பயன்பாட்டுக்கு வெளியாகும் […]

டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன், மெட்ரோ ரயிலை ஒரு வணிக வளாகமாக மாற்றும் வர்த்தகத் திட்டம் ஒன்றில் பணியாற்றி வருகிறது. அதன்படி, Momentum 2.0 என்ற செயலி உருவாக்கப்பட்டு, அதன் மூலம் பல்வேறு பொருட்கள் ரயில் பயணிகளுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. ரயில் பயணங்களின் போது, பயணிகள் இந்த செயலி மூலம் பொருட்களை ஆர்டர் செய்தால், அவர்கள் தாங்கள் இறங்கும் ரயில் நிலையங்களில் அவற்றை பெற்றுக் கொள்ளலாம். இந்த செயலி, வரும் ஜூலை மாதம் பயன்பாட்டுக்கு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன், இந்த செயலி மூலம், பயணத்தில் இருக்கும் பொழுதே, அடுத்த பயணத்திற்கான பயணச்சீட்டையும் முன்பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

டெல்லி மெட்ரோவில், ஒரு நாளில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயணிக்கின்றனர். எனவே, இந்த திட்டம் கணிசமான வர்த்தகத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. முதற்கட்டமாக, 21 மெட்ரோ நிலையங்களில் இந்த சேவை கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக, ரயில் நிலையங்களில் ஸ்மார்ட் லாக்கர் வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் மூலம், மளிகை உள்ளிட்ட பல்வேறு தினசரி பயன்பாட்டு பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்று கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu