மாமா எர்த் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஹொனாசா கன்ஸ்யூமர் நிறுவனத்தின் பங்கு விலை இன்று 5% சரிந்து ரூ.495 ஆக உள்ளது. நிறுவனத்தின் 10.9% பங்குகள், அதாவது ரூ.1,763 கோடி மதிப்புள்ள பங்குகள் பிளாக் டீலில் விற்கப்பட்டதால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மாமா எர்த் பங்குகளை பீக் XV பார்ட்னர்கள், சீக்வோயா கேபிடல் உள்ளிட்ட முதலீட்டாளர்கள் விற்றனர். இந்த பங்குகள் ஒவ்வொன்றும் ரூ.480-க்கு விற்பனை செய்யப்பட்டன. இது சந்தை விலையை விட 8% குறைவு. ஆரம்பத்தில் 8% பங்குகள் மட்டுமே விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இறுதியில் 10.9% பங்குகள் விற்பனை செய்யப்பட்டன. கோடக் மற்றும் ஜெஃப்ரிஸ் நிறுவனங்கள் இந்த பங்கு விற்பனையை மேலாண்மை செய்தன.