மாமல்லபுரம் மாணவி ஆசியன் சர்பிங் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் மீனவர் பகுதியைச் சேர்ந்த 14 வயது கமலி, மாமல்லபுரம் செயின்ட் மேரீஸ் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். 2 வயதிலிருந்து சர்பிங் மற்றும் ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட கமலி, பல மாநில மற்றும் தேசிய போட்டிகளில் வெற்றிகளை பெற்றுள்ளார். சமீபத்தில் மாலத்தீவில் நடைபெற்ற ஆசியன் சர்பிங் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்றார். 2026ல் ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். பள்ளி தாளாளர் பிரான்சிஸ் மற்றும் தலைமை ஆசிரியை பிருந்தா அவரது சாதனையை பாராட்டினர், காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தமிழ்செல்லி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கவுரவித்தார்.