நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து மம்தா வெளிநடப்பு

பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்திலிருந்து மம்தா வெளிநடப்பு செய்துள்ளார். டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல் மந்திரிகள் கலந்து கொள்ளும் முதல் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இதில் பாரபட்சமாக தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் பெயர் கூட உச்சரிக்கப்படவில்லை. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் மற்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க […]

பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்திலிருந்து மம்தா வெளிநடப்பு செய்துள்ளார்.

டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல் மந்திரிகள் கலந்து கொள்ளும் முதல் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இதில் பாரபட்சமாக தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் பெயர் கூட உச்சரிக்கப்படவில்லை. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் மற்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல் மந்திரிகள் பலர் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். ஆனால் மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா இதில் கலந்து கொண்டார். பின்னர் மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து செய்தியாளர்களை சந்தித்தார். அதில், எதிர்க்கட்சிகளில் இருந்து ஒரே முதலமைச்சராக பங்கேற்ற எனக்கு முழுமையாக பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை. நான் பேசிக் கொண்டிருக்கும் பொழுது மைக்கை ஆப் செய்து என்னை அவமதித்து விட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu